கோவையில் ரூ.1620 கோடி மதிப்பில் மேம்பாலம்..அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்

தமிழகத்திலேயே நீண்ட மற்றும் உயரமான மேம்பாலமாக அமைய உள்ள கோவை அவினாசி சாலையில் 10.10 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைய உள்ள மேம்பாலப்பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பூமி பூஜையுடன் தொடக்கி வைத்தார்.

கோவை, டிச-3

கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்ட்வின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், எட்டிமடை சண்முகம், பி.ஆர்.ஜி. அருண் குமார், ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *