ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்.. ரஜினிகாந்த் அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்..!

ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பரில் 31-ல் தேதி அறிவிப்பதாக ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் ரஜினி பதிவிட்டுள்ளார்.

சென்னை, டிச-3

ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.

#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல  

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என கடந்த மார்ச் மாதம் ரஜினி அறிவித்திருந்தார். தான் முதல்வராக விரும்பவில்லை என 2017-ம் ஆண்டிலேயே கூறிவிட்டேன் என்றும் நினைவுகூர்ந்திருத்தார். இந்நிலையில், கடந்த 30-ம் தேதி மாவட்டச் செயலாளருடன் கோடம்பாக்கம் ராகேவேந்திரா திருமண மண்டபத்தில் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா என்றிருந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சுமார் 28 ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருப்புக்கு ரஜினி விடை தந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *