தமிழகம் மட்டும் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்காதது ஏன்? கமல்ஹாசன் கேள்வி

சென்னை, டிச-3

கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனையை தமிழகத்தில் உள்ள தனியார் ஆய்வகங்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கான பரிசோதனை கட்டணம் தமிழகத்தில் மட்டும் குறையவில்லை என்றும் மற்ற மாநிலங்களில் குறைந்துவிட்டது என்றும் கமலஹாசன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/- பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *