ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? – தமிழருவி மணியன் பதில்
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. ரஜினிக்குத்தான் தெரியும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, டிச-2

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழருவி மணியன் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. அரசியல் நிலைப்பாட்டை ரஜினியே வெளிப்படுத்துவார். உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் கூறினேன். ரஜினியின் வாழ்க்கை ஒரு சிறந்த புத்தகம். தமிழக மக்களிடம் எதையும் அவர் மறைக்க தேவையில்லை என்றார்.
இதுவரை ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கூறியிருந்த தமிழருவி மணியன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.