மின்சாரம் தாக்கி உயிரிழந்த கட்டிட தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி.. முதல்வர்

நிவர் புயலின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், டிச-2

கண்டாச்சிபுரம் அருகே கெங்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(47), கட்டிட தொழிலாளி. கடந்த வாரம் இவர் தனது மகள் நித்யாவின் திருமணத்திற்காக தனது வீட்டில் பந்தல் போட்டிருந்தார். அப்போது இரவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தபோது எதிர்பாராதவிதமாக அந்த பந்தல், சரவணன் மீது விழுந்தது. அப்போது அதில் இருந்த மின்சார விளக்குகளுக்காக போடப்பட்டிருந்த ஒயர், சரவணன் மீது விழுந்ததில் அவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

இந்நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.6 லட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *