ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் இன்று சந்திப்பு.. கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை..

தமிழக சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, டிச-2

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சந்திக்கிறார். 2021 சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி தொடரும் என அறிவித்தார். துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்றார். இதனைத் தொடர்ந்து அமித்ஷாவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி தங்களுக்கான தொகுதிகள் பட்டியலையும் ஸ்டாலினிடம் கொடுக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுவிடம் தொகுதிகளை பேரம் கேட்டு பெறப்போவதில்லை என தினேஷ் குண்டுராவ் கூறியிருந்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 25 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *