நாங்குநேரியை கைப்பற்றியது அதிமுக!!!

சென்னை, அக்டோபர்-24

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலுமே அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், நாங்குநேரியில் இறுதி சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் நாராயணன் 94,562 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 32,333 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளார் ரூபி மனோகரன் 62,229 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி 2,622 வாக்குகள் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் அதிக வாக்குகளை பெற்ற நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *