என் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது.. ராமதாஸ் உருக்கம்
என் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது…. உயிரும், உள்ளமும் சென்னை போராட்டக்களத்தில் தான் உள்ளன என ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை, டிச-1

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. மற்றும் வன்னியர்சங்கம் இணைந்து சென்னையில் இன்று முதல் டிசம்பர் 31-ந் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்கும் நோக்கத்தோடு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் சென்னை நோக்கி கார் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்தனர். அவர்களை சென்னை எல்லையான பெருங்களத்தூர் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், பாமகவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில், என் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது…. உயிரும், உள்ளமும் சென்னை போராட்டக்களத்தில் தான் உள்ளன என கூறியுள்ளார்.