புதிய கட்சி, 2021 தேர்தலில் பங்களிப்பு.. ஸ்டாலினை அலறவிடும் மு.க.அழகிரி..!

தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை, டிச-1

மதுரையை சேர்ந்த திமுக நிர்வாகி எஸ்.ஆர். நல்லமருது மறைவையொட்டி அவரது இல்லத்துக்கு சென்ற மு.க.அழகிரி, அங்கு அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, புதிய கட்சி துவங்குவேனா என்பது போகப் போக தான் தெரியும். எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றார்.
மேலும், பாஜகவில் இணைவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு வதந்திகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என அழகிரி கூறினார். திமுகவில் துரை தயாநிதிக்கு பதவி வழங்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, அழைத்துப் பேசட்டும் என்று அவர் பதிலளித்தார்.

மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு திமுக தலைமை குறித்து மு.க.அழகிரி கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் கட்சியில் அழகிரியை சேர்ப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாள்களாக அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வரும் பேரவைத் தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *