மராட்டியத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்…
மும்பை, அக்டோபர்-24
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்., கட்சி நான்காவது இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதனால் தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கடந்த அக்.21ல் நடந்தது. இன்று காலை முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக-சிவசேனா கூட்டணி, 160 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கின்றன. இதில், பா.ஜ.க. 99 இடங்களிலும் , சிவசேனா 61 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல் காங்., கூட்டணி 98 இடங்களில், அதில் தேசியவாத காங்., 55 இடங்களிலும் , காங்., 38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இணைந்து இரண்டாம் இடத்தை பெற்றாலும், காங்கிரஸ் கட்சி 4வது நிலையில் தான் இருக்கிறது. இதனால், அங்கு எதிர்கட்சியாக இருந்த காங்., அந்த அந்தஸ்சை இழப்பது உறுதியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சி வாய்ப்பை பெறுகிறது.