நகை வாங்க போறீங்களா? இதான் கரெக்ட் டைம்..சவரனுக்கு ரூ.400 குறைந்தது..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, நவ-30

தங்கம் விலை கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் இந்த வாரமும் தொடர்ந்து‌ தங்கம் விலை குறைந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,524-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.63.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 40 காசு குறைந்து 63 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *