சிட்னி போட்டியில் இந்திய இளைஞர் காதலுக்கு ஓகே சொன்ன ஆஸி பெண்.. வைரலாகும் வீடியோ
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் ஆஸியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இந்தியர் காதலை வெளிப்படுத்திய சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
சிட்னி, நவ-30

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் முறை ரசிகர்கள் கூட்டத்தோடு இந்த தொடர் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியபோது இந்த சம்பவம் நடந்தது. மைதானத்தில் இந்தியர் ஒருவரும், ஆஸ்திரேலிய பெண் ஒருவரும் உடன் இருந்தனர். கேமரா தன்னை நோக்கி திரும்பியதும், அந்த இந்திய இளைஞர் எழுந்து நின்று அந்த பெண்ணை பார்த்தார். அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார்.தான் கொண்டு வந்திருத்த மோதிரத்தை காட்டி அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்தார். இதை பார்த்ததும் உற்சாகம் அடைந்த ஆஸ்திரேலிய பெண் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அனைத்தும் பெரிய திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. களத்தில் இருந்த கோலி, மேக்ஸ்வெல் போன்ற எல்லோரும் இந்த அழகான சம்பவத்தை பார்த்தனர். மைதானம் மொத்தமாக ஆரவாரமாக குரல் எழுப்பியது. மேக்ஸ்வெல் உற்சாகத்தில் கைதட்டி அந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
