விக்கிரவாண்டியில் அதிமுக அமோக வெற்றி

சென்னை, அக்டோபர்-24

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளார் முத்தமிழ்ச் செல்வன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலுமே அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், விக்கிரவாண்டியில் 20 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1, 13,428 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44,782 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 2,913 வாக்குகள் பெற்றுள்ளது. 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் அதிக வாக்குகளை பெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *