நாங்க அதிமுக கூட்டணியில் தான் இருக்கோம்.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
சென்னை, நவ-27

செம்மஞ்சேரியில் வெள்ளநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நிவர் புயல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது, இருப்பினும் தாழ்வான பகுதியாக உள்ள இந்த செம்மஞ்சேரியில் மழை பெய்தால் நீர் சூழும்சூழல் இருப்பதால் இதனை சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின்போது கூட்டணிக் கட்சிகள் வருத்தத்தில் இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து பேசிய அவர், தற்போது வரை பாஜக அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதம் நடைபெறக்கூடிய பொதுக்குழுவுக்கு பிறகே அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.