கே.எஸ்.அழகிரிக்கு நாக்கில் சனி-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சென்னை, அக்டோபர்-24
நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது,
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தான் வெற்றி பெற்றது. அதனை நிரூபிக்கும் வகையில் மக்கள் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து நிரூபித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் காந்தியவாதிகள் யாருமில்லை. காங்கிரஸ் கார்ப்பரேட் நிறுவனமாக மாறியுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை என்பது உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம். கே.எஸ். அழகிரிக்கு நாக்கில் சனி, அவர் பேசாமல் இருந்தால் கூட நாங்குநேரியில் மக்கள் ஓட்டு போட்டிருப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக இருக்கிறது. இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் நிலைக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.