பசு மாட்டை கடத்தி வன்புணர்வு – 3 பேர் கைது

திருப்பூர் செப்டம்பர் 3

திருப்பூர் அருகே பசு மாட்டை கடத்தி சென்று, வன்புணர்வு செய்த இளைஞர்கள் 3 பேரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ளது பெருமா கவுண்டன்பாளையம். இங்கு வசித்து வருபவர் கந்தசாமி என்ற விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.எப்பவுமே நைட் நேரத்தில் நன்றாக இருக்கும் பசுமாடு, காலையில் ஆனதும் பலவீனமாக இருப்பதை கந்தசாமி கவனித்துள்ளார். இது சில நாட்களாக தொடர்ந்ததால், கவலையும், குழப்பமும் அடைந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு பசுமாட்டை வெளியே கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் மாடு கத்தும் சப்தம் கேட்டு விழித்த கந்தசாமி, உடனே வெளியே வந்து பார்த்தார். ஆனால் பசுமாட்டை காணவில்லை. பல இடங்களில் தேட ஆரம்பித்தார்.
அப்போது அருகில் உள்ள கோழிப்பண்ணை ரூமில் இருந்து சப்தம் வருவதை கவனித்த அதனுள் சென்று பார்த்தார். அப்போது, பசுமாட்டினை அந்த அறையில் வைத்து மூன்று இளைஞர்கள் வன்புணர்வு செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 3 பேரும் அருகில் உள்ள கல்குவாரியில் வேலை செய்பவர்கள் என்பதும், 3 பேருமே வடமாநில இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது.

தினந்தோறும் இரவு நேரத்தில், பசு மாட்டினை கடத்தி சென்று, அருகில் இருக்கும் கோழிப்பண்ணை ரூமில் வைத்து 3 வடமாநில இளைஞர்களும் தொடர்ந்து வன்புணர்வு செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 3 இளைஞர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்துக்கு பிழைப்புக்காக வரும் வடமாநில இளைஞர்கள் அடிக்கடி குற்றச்சம்பங்களில் சிக்கி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *