கொட்டும் மழையிலும் நிவாரணப் பணிகளை களத்தில் நின்று செய்த அமைச்சர் S.P.வேலுமணி..!

நிவர் புயலால் சென்னையின் முக்கிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆய்வு செய்தார்.

சென்னை, நவ-26

சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 169-ல் உள்ள கண்ணன் காலணியில் ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 25 எச்பி பம்பு செட்டுகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், துணை ஆணையாளர் மேகநாதரெட்டி, வட்டார துணை ஆணையாளர் ஆல்பி வர்கிஸ், மண்டல கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ், மண்டல அலுவலர் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து, நிவர் புயல் & கனமழை காரணமாக சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஏ.எம்.எம். பள்ளியில் உள்ள நிவாரன முகாமை பார்வையிட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

நிவர் புயல் மற்றும் கனமழையால் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பாரதிதாசன் காலனியில் தேங்கிய மழை நீர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை அமைச்சர் வேலுமணி பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *