இன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்..! ட்விட்டரில் #MumbaiTerrorAttack ஹேஷ்டேக் டிரெண்டிங்..!!

மும்பை தாக்குதலை நினைவு கூறும் வகையில் டுவிட்டரில் #MumbaiTerrorAttack என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

மும்பை, நவ-26

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் அரபிக்கடல் வழியாக இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பைக்குள் ஊடுருவி பல இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மும்பையை முற்றுகையிட்டு 4 நாட்கள் நவம்பர் 29ம் தேதி வரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 18 போலீசார், வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அப்போதைய தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே மற்றும் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சலாஸ்கர் ஆகியோரும் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தனர். தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 9 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு கடந்த 2012 நவம்பர் 21ம் தேதி தூக்கிலிடப்பட்டான்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் 12-வது ஆண்டு நினைவு தினம் இன்று மும்பையில் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, மும்பை தாக்குதலை நினைவு கூறும் வகையில் டுவிட்டரில், #MumbaiAttack #2611Attack, #MumbaiTerrorAttack, #neverforgetneverforgive என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது, #MumbaiTerrorAttack டுவிட்டரில் இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்திலும், #MumbaiTerrorAttack டுவிட்டரில் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *