இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி, தொண்டர்கள் உற்சாகம்

சென்னை, அக்டோபர்-24

சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றுள்ள நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 21-ந் தேதி நடைபெற்றது. இந்த இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.  இதில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். இதனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், மேளங்கள் முழங்க ஆடி, பாடியும் தலைவர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *