இந்தியாவில் ஒரே நாளில் 44,489 பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92.66 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 86.79 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி, நவ-26

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92.66 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 92,66,706 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 524 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,35,223 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86,79,138 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 36,367 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,52,344 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.66 சதவீதமாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *