புயல் கரையைக் கடந்தாலும், வட மாவட்டங்களில் கனமழை தொடரும்..!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும். புயல் கரையைக் கடந்தாலும், பலத்த காற்று தொடர்ந்து வீசக்கூடும். தீவிரபுயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, நவ-26

புயல் கரையை கடந்ததை தொடர்ந்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

புதுச்சேரி அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 வரை புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தால் காற்றும், மழையும் தொடரும்.தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும். தீவிரபுயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறி அதிக கனமழையை தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *