செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைப்பு

கனமழை குறைந்து, நீர்வரத்து குறைந்தததை தொடர்ந்து,செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது .

சென்னை, நவ-26

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. அதன்பின்னர் வலுவிழந்து தீவிர புயலாக நிலப்பரப்பில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

நிவர் புயலின் தாக்கம் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது. இதனால் நேற்று மதியம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. அதன்பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தால் வெளியேற்றும் நீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்பட்டு, அதிகபட்சமாக வினாடிக்கு 9000 கனஅடி வரை திறக்கப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் குறையத் தொடங்கியது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று தொடக்கத்தில், விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 9 ஆயிரம் கனஅடியானது. கனமழை குறைந்து, நீர்வரத்து குறைந்தததை தொடர்ந்து, நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 5,000 கன அடி வீதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 1000 கன அடியாக திறக்கப்பட்ட நிலையில் தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *