திமுகவின் திருமங்கலம் ஃபார்முலா இடைத்தேர்தலில் பலனளிக்கவில்லை-ஜெயக்குமார்

சென்னை, அக்டோபர்-24

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தமிழகத்தின் வடக்கே உள்ள விக்கிரவாண்டியிலும், தெற்கே உள்ள நாங்குநேரியிலும் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி அடையும் என்பது தெளிவாகியுள்ளது. ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடு பொடியாகியுள்ளது. இடைத்தேர்தல் வெற்றியுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம். உள்ளாட்சி தேர்தலுக்கு இடைத்தேர்தல் வெற்றி அச்சாரமாக உள்ளது.

மேலும் விஜயகாந்தின் பிரபலமான வசனமான தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெற்ற போர் என்று இந்தத் தேர்தலை ஜெயக்குமார் வர்ணித்தார். “பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டு கௌரவர்கள் தோற்றுவிட்டனர். பணநாயகத்தை ஜனநாயகம் வீழ்த்திவிட்டது. திமுகவின் திருமங்கலம் ஃபார்முலா இடைத்தேர்தலில் பலனளிக்கவில்லை” இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *