அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ”ஸ்ரீராமர்” பெயர்.. உ.பி. அமைச்சரவை ஒப்புதல்

லக்னோ, நவ-25

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ஸ்ரீராமரின் பெயரை வைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ அயோத்தியில் உள்ள விமான நிலையத்தின் பெயரை மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் என பெயர் மாற்றும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.இதற்காக உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விமானப் போக்குவரத்துக்கு துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *