13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை.. முதல்வர் அறிவிப்பு..!
நிவர் புயல் எதிரொலியாக, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, நவ-25

இது தொடர்பாக முதல்வர் அளித்த பேட்டியில், நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அடையாறு ஆற்றில் 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும், நிவர் புயலின் கனமழை காரணமாக சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளையும் (26.11.2020) பொது விடுமுறை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.