மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக -சிவசேனா கூட்டணி…

மும்பை, அக்டோபர்-24

மராட்டிய மாநிலத்தில் மீண்டும் பாஜக – சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது.

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் உள்ள 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் சுமார் 160 தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்கிற நிலையில் 160 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.  பாஜக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் சிவசேனா 50க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் என்சிபி-காங்கிரஸ் கூட்டணி பின்தங்கியிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் காங்கிரஸ்  40 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *