ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை, தொடரும் இழுபறி…
அக்டோபர்-24
ஹரியாணா பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் பா.ஜ.க. காங்கிரஸ் உட்பட ஆயிரத்து 169 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அரியானாவில் தொடக்கத்தில் பாஜக சற்று முன்னிலை வகித்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் இரண்டு கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவத் தொடங்கியது.
மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 41 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் முன்னிலையில் உள்ளது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 18 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் தற்போது வரை பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒருவேளை இதே நிலை நீடித்தால், அங்கு தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான சூழல் ஏற்படும். அப்படி இருக்கையில் மற்ற கட்சிகள் ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
பா.ஜ.க.-41
காங்கிரஸ்-29
ஜனநாயக ஜனதா கட்சி-12
இதர கட்சிகள்-18