நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். தேவைப்படும் உதவி, ஒத்துழைப்பு மத்திய அரசால் வழங்கப்படும் என்று முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியை தொடர்பு கொண்டும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

டெல்லி, நவ-24

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். நிவர் புயலுக்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என முதல்வர் பழனிசாமியிடம் உறுதி அளித்துள்ளார்.

அதேபோன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளார். புதுச்சேரிக்கு தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்புக்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *