சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை-ஓ.பி.எஸ்.
மதுரை, அக்டோபர்-24
மருது சகோதரர்களின் 218ஆவது குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே, தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று அ.தி.மு.க. மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். அப்போது, டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், இருவரையும் கட்சியில் சேர்ப்பது தற்போதைய காலகட்டத்தில் அவசியமற்றது என்றும், தேவையென்றால் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என்றார்.