தமிழகத்தில் இன்று புதிதாக 1,624 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, நவ-23

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,47,752 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,904 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,622 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 483 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,12,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,16,06,250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65,012 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 217 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 12,245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,66,167 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 958 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,05,419 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 666 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 33 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *