7 பேர் விடுதலை குறித்து பேச இருந்த நிலையில், முதல்வர் – ஆளுநர் சந்திப்பு திடீர் ரத்து..!
கிண்டி ஆளுநர் மாளிகையில இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க இருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை, நவ-23

கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மாதந்தோறும் சந்தித்து வருகிறார். சந்திப்பின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் விளக்கம் அளிப்பார்.
அந்த வகையில் இன்று மாலை ஆளுநரை சந்தித்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஏழு பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரம் குறித்தும் பேசுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுநர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.