“நிவர்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… முதல்வர் ஆலோசனை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள “நிவர்” புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, நவ-23

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புயலால் ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *