தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் ?

சென்னை செப்டம்பர் 3

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் புதிய பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் பதவி ஏற்றார். இதையடுத்து பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டார்.கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக மாநில தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் பணியாற்றினார். தமிழிசை பாஜக தலைவரான பின்னர் தமிழகத்தில் பாஜக எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் வரும் டிசம்பரில் புதிய தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்க பாஜகவின் உள் கட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய தலைவருக்கான பட்டியலில் முன்னாள் தலைவராக இருந்த பொன், ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச். ராஜா, சி.பி ராதா கிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சந்திரசேகர் உள்ளிட்டோர் போட்டியில் இருக்கிறார்கள்.

இதில் புதிய தலைவராக நியமிக்கப்பட நயினார் நாகேந்திரன் அல்லது பொன் ராதா கிருஷ்ணனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 2021ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *