2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்.. வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்த ஓ.பி.எஸ்..!!
2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக – பாஜகவின் வெற்றிக் கூட்டணி தொடரும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை, நவ-21

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா முன்னிலையில் உரையாற்றிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி இனிவரும் தேர்தல்களிலும் தொடரும் என்று தெரிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக் கனியை பறிப்போம் என்றார்.
வேல் யாத்திரை போன்ற விவகாரங்களில் அதிமுக, பாஜக இடையே முரண்பாடு இருந்து வந்த நிலையில், பேரவைத் தேர்தலில் கூட்டணி நிலைமை குறித்த கேள்விகள் இருந்து வந்தன. இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது..