3வது முறையாக அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பணியாற்ற வேண்டும்.. முதல்வர் பேச்சு

சென்னை, நவ-20

அ.தி.மு.க. அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது ‘‘பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் துவண்டு விடும் கட்சி அதிமுக அல்ல. இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை சட்டசபை தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும்.நீட் தேர்வில் திமுக-காங்கிரஸ் செய்த துரோகத்தை மக்களிடம் விளக்கிக் கூற வேண்டும். 7.5 சதவீத உள்ஒதுக்கீடு உள்ளிட்ட அதிமுக சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும்’’ என்றார்.

கூட்டம் முடிந்த பின்னர் ஓபிஎஸ்- ஈபிஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் ‘‘அதிமுக-வின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டசபை தேரதல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் எம்பி, இரா. கோபாலகிருஷ்ணன், தேர்தல் பிரசாரக் குழுவில் எம்.எல்.ஏ., கி.மாணிக்கம் இன்று முதல் உறுப்பினர்களாக இணைந்து செயல்படுவார்கள். கட்சித் தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா வருகை, சசிகலா விடுதலை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *