மு.க.அழகிரி புகார் கொடுத்தால் அண்ணா அறிவாலயத்தை இரண்டாக பிரித்து கொடுத்து விடுவோம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி

விருதுநகர், நவ-20

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

அதிமுக புலி வேட்டைக்கு போய்க்கொண்டிருக்கிறது. திமுக எலி வேட்டைக்கு வாரார்கள். நாம் அம்பை எடுத்து தொடுத்து வெற்றி பெற போகிறோம். திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆரும்,தங்கம் தென்னரசும் நாடகம் போடுவார்கள்,மக்களை ஏமாற்ற பார்ப்பார்கள். இந்த மாவட்டத்திற்க்கு அவர்கள் இரண்டு பேரும் என்ன செய்தார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிக்கும் அனைத்து வகையான கூட்டு குடிநீர் திட்டங்களும் கொண்டுவரப்பட்டது அம்மாவின் ஆட்சியில் தான். விருதுநகரில் மருத்துவக் கல்லூரியை கொண்டுவந்தது ஸ்டாலின் என்கிறார் அவர் ஒரு லூசு.10 வருடங்களாக அம்மா ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. நான் 10 வருடங்களாக மந்திரியாக உள்ளேன். மருத்துவ கல்லூரியையும், அரசு கல்லூரியையும் கொண்டு வந்தது முதல்வரும் துணை முதல்வரும்தான். இந்த தொகுதிக்கு எது கேட்டாலும் உடனடியாக செய்யக்கூடிய முதல்வர் எடப்பாடியார் அவர்கள் ஜனவரியில் மருத்துவ கல்லூரியை திறந்து வைக்கப் போகிறார்.

ஸ்டாலின் யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன் என்று சொல்வது அசிங்கமாக உள்ளது. ஸ்டாலின் என்னமோ முதலமைச்சர் மாதிரி கூறுகிறார், மருத்துவ கல்லூரியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து சட்டத்தை இயற்றியது முதல்வரும் துணை முதல்வரும் தான் அதை ஸ்டாலின்தான் பெற்று தந்ததாக கூறுகிறார். ஸ்டாலின் கோரிக்கை கூட வைக்காமல் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு இப்போது நடித்து கொண்டிருக்கிறார். ஸ்டாலின் பேசுவது எல்லாம் பொய்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புதிய பிரச்சனை ஒன்று உள்ளது. அவரை பழிவாங்க அவரது அண்ணன் மு.க அழகிரி கிளம்பிவிட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என்று மு.க அழகிரி காவல்துறையிடம் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். நாங்கள் நியாயமாகப் பேசி அண்ணா அறிவாலயத்தில் ஒரு பக்க வாசல் ஸ்டாலினுக்கும் மற்றொரு பக்க வாசல் மு.க அழகிரிக்கும் பிரித்து கொடுத்து விடுவோம்.

உங்களுடைய ஒரு லட்சம் கோடி சொத்தை குடும்பத்தில் அனைவருக்கும் பிரித்து கொடுத்து விடுவோம் என்றார். அண்ணன் தம்பிகள் இடையே பிரச்சனைகள் உள்ளது எங்களுக்கு பிரச்சினையே கிடையாது ஸ்டாலின் தான் பிரச்சினை என்று நினைத்தோம் ஸ்டாலினை முடிப்பதற்கு மு.க அழகிரி உள்ளார். அஞ்சா நெஞ்சன் உன்னை குஞ்சா நெஞ்சனாக்கி விடுவார்.

ஸ்டாலின் பொய் சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை என்றார். திமுகவினர் குடும்பம் குடும்பமாக இருப்பார்கள் அதிமுக கட்சிகாரர்கள் தான் மொத்தக் குடும்பமாக உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *