தமிழகத்திற்கு ரூ.6,374 கோடி விடுவிக்க நிர்மலா சீதாராமனை சந்தித்து எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

புதுடெல்லி, அக்டோபர்-23

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.

தமிழக உள்ளாட்சித்துறையில் மின்னணு ஆளுகை திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு இ-பஞ்சாயத் புரஸ்கார் விருது இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் இருந்து புரஸ்கார் விருதை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு அடிப்படை மானிய நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், இயந்திர உற்பத்தி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியினை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கவேண்டும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18 முதல் 2019-20 வரை நிலுவையில் உள்ள ரூ.2,029.22 கோடி செயலாக்க மானியம் மற்றும் 2019-20 ஆம் ஆண்டிற்கான அடிப்படை மானிய தொகை ரூ.4,345.57 கோடி நிதியை விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மத்திய அமைச்சரிடம் எஸ்.பி.வேலுமணி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *