தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி!!!!

புதுடெல்லி, அக்டோபர்-23

தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் புதிதாக அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகள் தலா ரூ.395 கோடியில் அமைய உள்ளன. இதற்கு, மத்திய அரசு தலா ரூ.195 கோடியும், மாநில அரசு தலா ரூ.130 கோடியும் வழங்க உள்ளன. இதன்மூலம் 900 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கும் எனவும், அதில் 85 சதவீதம் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீதம் வெளி மாநில மாணவர்களுக்கும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தற்போது மொத்தம் 23 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. புது மருத்துவ கல்லூரிகளுக்காக நிலம் கையகபடுத்துதல், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்தல் போன்ற பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த கல்லூரிகள் திறக்கப்படும் போது, அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *