சின்னையா இது நியாயமாயா?.. தருமபுரி பொதுக்கூட்டத்தில் அன்புமணியை கலாய்த்த ஸ்டாலின்..!!

பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களைக் காணொலிக் காட்சி மூலமாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதிக நாள் வாழவைக்கும் அருமருந்தான நெல்லிக்கனியை, தான் உண்ணாமல் தமிழ்ப்புலவர் ஒளவைக்கு அளித்த கொடைவள்ளலாம் அதியமான் ஆட்சி செய்த மண் இந்த மண்.

கடை ஏழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்பட்ட அதியமான் வாழ்ந்த மண் இது. அத்தகைய தருமபுரி மாவட்டம் முழுவதும் இத்தகைய எழுச்சி மிகுந்த கூட்டத்தைச் சிறப்போடு ஏற்பாடு செய்த, தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ., மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் இன்பசேகரன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் பாராட்டுகிறேன்.

சேர, சோழ, பாண்டியர் உட்பட ஏழு மன்னர்களை களத்தில் எதிர்த்த மன்னன்தான் அதியமான். அதைப் போல இந்த வட்டாரத்தில் இருக்கும் எவரையும் எதிர்கொண்டு வெற்றிக் களத்தைத் தக்க வைத்திருக்கும் ஆற்றல் மிக்க படைத்தளபதிகள் தான் தடங்கம் சுப்பிரமணியும், இன்பசேகரனும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் இருவருக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோட்டையைக் கைப்பற்றி உள்ள கொள்ளைக் கூட்டத்தை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான ஜனநாயகப் போரை நவம்பர் முதல் தேதி ஈரோட்டில் இருந்து தொடங்கினேன். புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டப் பிரச்சாரத்தை முடித்துள்ளேன். இரண்டாம் கட்டப் பிரச்சாரப் பொதுக்கூட்டமானது தருமபுரியில் இருந்து தொடங்குகிறது.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக இருக்கிறார். அவர் பெயர் கே.பி.அன்பழகன். அவரால் உயர் கல்வித்துறைக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? உயர் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதாவது அவருக்குத் தெரியுமா?

அண்ணா பல்கலைக்கழகத்தையே தமிழக அரசுக்குச் சொந்தமில்லாமல் தனியாக மடைமாற்றம் செய்யத் துணைவேந்தர் சூரப்பா முயற்சி செய்தது, அமைச்சர் அன்பழகனுக்குக் களங்கம் அல்லவா? அமைச்சருக்குத் தெரிந்து இதனை சூரப்பா செய்தாரா? தெரியாமல் செய்தாரா?

உயர்கல்விச் செயலாளரது ஒப்புதலோடுதான் இந்த முயற்சிகளைச் செய்தேன் என்று சூரப்பா சொன்னாரே? அதற்கு அன்பழகனின் பதில் என்ன?

சூரப்பா, அண்ணா பல்கலைக் கழகத்தைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறார் என்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் தமிழக அரசு, திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல மாட்டிக் கொண்டது. சூரப்பா செய்வது தவறு என்று சொன்னது.

நான் அறிக்கை வெளியிட்டிருக்கா விட்டால், அண்ணா பல்கலைக் கழகத்தை சூரப்பா சுருட்டிக் கொண்டு ஓடி இருப்பார். அதுதான் உண்மை.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதையை பாடத்திட்டத்தில் சேர்த்ததை அமைச்சர் அன்பழகன் எதிர்த்தாரா?
சூரப்பாவின் மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டது, அமைச்சருக்குத் தெரியுமா? தெரியாதா?
ஒரு பணியிடத்துக்கு சமஸ்கிருதம் தெரிந்தவரை மட்டும்தான் போட வேண்டும் என்று சூரப்பா சொன்னது அமைச்சருக்குத் தெரியுமா தெரியாதா?

கொரோனா காலம் என்பதால் அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது. ஆனால் அதனை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தை ஏற்க வைக்க அமைச்சர் அன்பழகனால் முடியவில்லை. அண்ணா பல்கலைக் கழகத்தை ஏற்றுக் கொள்ள வைக்க அமைச்சரால் முடியவில்லை.
அதற்கு முன்னதாகவே மாணவர்களின் மனித தெய்வமே என்று விளம்பரம் செய்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அரசு உத்தரவை இந்தியத் தொழில் நுட்பக் கழகம் ஏற்காதபோது அ.தி.மு.க. அரசு என்ன செய்தது? இதைவிட இன்னொரு கொடுமையான செய்தி…

கலைக் கல்லூரிகளில் அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால் அந்த மாணவர்களை முதுகலை படிக்க சில அரசுக் கல்லூரிகளே அனுமதி மறுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. மாணவர்களைத் தேர்ச்சி என்று அறிவித்ததும் அரசுதான்.

தேர்ச்சி அடைந்தது செல்லாது என்று சொல்வதும் அரசு கல்லூரி நிர்வாகம்தான் என்றால், இந்த அரசாங்கத்துக்கு நிரந்தரமான கொள்கை எதுவும் கிடையாதா? எதற்காக மாணவர்களை ஏமாற்றுகிறீர்கள்?

புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் உயர்கல்விக்கு ஏராளமான தடைகளை அக்கல்வி முறை கொண்டு வரப்போகிறது. அதனை இவர்கள் எதிர்க்கவில்லை. அனைத்துக் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்போகிறார்கள். அதனை அமைச்சர் அன்பழகன் எதிர்க்கவில்லை.

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சொன்னார். அதனை இந்த அமைச்சர் அன்பழகன் மறுக்கவில்லை. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து ஒருவர். சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவில் இருந்து ஒருவர். இசைப்பல்கலைக் கழகத்துக்கு கேரளாவில் இருந்து ஒருவர் – என்று வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே ஆளுநர் நியமிக்கும் போது அ.தி.மு.க. அரசு தட்டிக் கேட்டதா?

கொரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை நோயாளிகள் தங்க வைக்கப்படும் முகாமாக சென்னை மாநகராட்சி அறிவித்தது. ஆனால், அதனை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. இவ்வளவுதான் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அதிகாரமே இருக்கிறது.

அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவிக் காலத்தில் உயர்கல்வித்துறையையும் காப்பாற்றவில்லை. தனது அமைச்சர் பதவிக்கான அதிகாரத்துடனும் செயல்படவில்லை. மொத்தத்தில் அமைச்சர் என்று சொல்லிக் கொள்ள எதுவுமே செய்யவில்லை.
கொரோனா காலம் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் கூட்டுவது சரியாக இருக்காது என்பதால் காணொலி மூலமாக இத்தகைய கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறோம்.

இதுதான் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு அளவுக்கு மீறி எரிச்சலையும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

எந்தச் சூழலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாட்டைத் தடுக்க முடியவில்லை என்பதால் ஆத்திரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வார்த்தைகளின் வன்மத்தைச் சேர்த்துக் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்.

அவரது பேச்சைக் கேட்டு எனக்குக் கோபம் வரவில்லை. எடப்பாடி பழனிசாமிக்காக நான் பரிதாபப்படுகிறேன். ஆத்திரம், ஆணவம் அவரது கண்ணை மறைக்கிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறோம் என்ற கோபம், அவரது நாக்கைத் தடம் புரள வைக்கிறது.
கடந்த வாரம் தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள், அ.தி.மு.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போலப் பேசி இருக்கிறார். தூத்துக்குடியில் அமைதியான வழியில் ஊர்வலம் போன பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்து தூத்துக்குடிக்குப் போயிருக்கிறார் புழனிசாமி.

இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகுதிக்கே போகாதவர், இரண்டு முறை தனது பயணத்தை ரத்து செய்தவர், அங்கே சென்று, ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடக்க ஸ்டாலின்தான் காரணம்’ என்று சொல்லி இருக்கிறார். 13 பேர் பச்சைப்படுகொலை செய்யப்பட்டப் பிறகும் பழனிசாமி திருந்தவில்லை என்பதற்கு உதாரணம்தான் அவரது இந்தப் பேச்சு. 13 பேரைக் கொன்றும், நூற்றுக்கணக்கானவர்கள் காயம்பட்டும் நடந்த கொடூரம், பழனிசாமி ஆட்சியில்தான் நடந்தது. ஆனால் அதற்கு ஸ்டாலின்தான் காரணம் என்று பழனிசாமி சொல்கிறார் என்றால், தமிழ்நாட்டு மக்களை எதுவும் தெரியாத அப்பாவிகளாக அவர் நினைக்கிறாரா? இந்தக் கொடூரக் கொலைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறாரா?

மாபாதகக் கொலைக் குற்றத்தை அரசியல் குற்றச்சாட்டாக திசை திருப்புவதற்கு பழனிசாமி முயற்சிக்கிறார். அதனால்தான், இப்படிப் பேசுகிறார்.

13 பேர் கொலைக்கு ஸ்டாலின்தான் காரணம் என்றால், அந்தப் பதிமூன்று பேர் வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்லும் துணிச்சல் பழனிசாமிக்கு உண்டா? அதிகாரம் பொருந்திய முதலமைச்சர் பழனிசாமி, தன்னுடைய போலீஸ் பாதுகாப்போடு அந்த 13 பேரின் வீட்டுக்கு செல்ல முடியுமா? அதற்கான அருகதை உண்டா?
தூத்துக்குடிக்குப் போகவே பயந்தவர், தான் செல்லும் பாதையில் கடைகளை மூட வைத்துவிட்டு, தலைமறைத்து ஓடிய கோழைதான் இந்த பழனிசாமி.

தூத்துக்குடிக்குச் சென்ற அவரை வழிமறித்து மாரீஸ்வரி என்ற மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் மனு கொடுத்தாராம். அவருக்கு ஒரு மணிநேரத்தில் பழனிசாமி வேலை கொடுத்தாராம். இப்படி ஒரு செய்தியை ஊடகங்களில் பார்த்தேன்.

இந்த நாடகத்துக்குள் நான் போக விரும்பவில்லை. உங்கள் நாடகத்தின் மூலமாக ஒரு தமிழ்ச் சகோதரிக்கு வேலை கிடைத்துள்ளதே என்று மகிழ்ச்சி அடைகிறேன். மாரீஸ்வரிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர், முதலமைச்சரை வந்து மொத்தமாகச் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, ஏன் முதலமைச்சர் சந்திக்கவில்லை.

தங்களது குடும்பத்திற்கு தகுதிக்கு ஏற்ற, படிப்புக்கு ஏற்ற வேலை தர வேண்டும் என்று பத்து முறைக்கு மேல் மனுக் கொடுத்தும் ஏன் வேலை தரவில்லை? கண்துடைப்புக்காக ஒருசிலரை மட்டும் சந்தித்து அனுப்பிவிட்டது ஏன்? என்ன பயம்?

மக்களைச் சந்திக்க பயப்படும் பழனிசாமிக்கு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார என்ன அருகதை இருக்கிறது?
தருமபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூன்று பேரையும் பேருந்தில் வைத்து எரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் இன்னமும் ஆறாத வடுவாகத்தான் எல்லோரது மனதிலும் பதிந்திருக்கிறது.
அந்தக் கொலையாளிகளை, எடப்பாடி பழனிசாமியின் அரசு விடுதலை செய்தது. ஆனா, பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை குறித்து மட்டும் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்? இரட்டை வேடம் போடுவதது ஏன்?

அவர் முதலமைச்சராக ஆவதற்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. ஜெயலலிதா இறந்து போனதால் – சசிகலா சிறைக்குப் போனதால் – முதலமைச்சர் ஆனவர் இந்த பழனிசாமி.
தன்னால் மறுபடியும் வெற்றி பெற முடியாது, மறுபடியும் முதலமைச்சர் ஆக முடியாது என்பது அவருக்குத் தெரியும். அதனால் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.

ஸ்டாலின் என்ன சாதனை செய்திருக்கிறார்?’ என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் என்ன சாதித்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். நான் செய்த சாதனைகள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். சென்னை மாநகர மேயராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் நான் இருந்த காலத்தில் மகத்தான சாதனைகளைச் செய்தவன் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும். இது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். தமிழ்நாடே தெரியாத பழனிசாமிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

25 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 50 லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றவன் நான்.

  • ஸ்டாலின் என்ன சாதித்தார் என்று கேட்கும் முதலமைச்சர் அவர்களே! சென்னையில் நீங்கள் பயணிக்கும் பாலங்கள் அனைத்தையும் கட்டியது இந்த ஸ்டாலின்தான் என்பதை உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் தலைநகர் சென்னையில் எங்கே சுற்றினாலும், நான் கட்டிய பாலங்களில் பயணம் செய்யாமல் இருக்க முடியாது. ஒன்றல்ல, ஒன்பது பெரிய பாலங்களையும், 49 குறும்பாலங்களையும் கட்டியவன் நான்.

* மாநில அரசின் நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைத்தவன் நான்.

* ஒவ்வொரு நாளும் மலையெனக் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு கனரக வாகனங்கள், துப்புரவு எந்திரங்கள் மூலம் குப்பை அகற்றும் திட்டம்!

* துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்திற்கு மருத்துவ நலத்திட்டம்

* 302 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை போக்குவரத்து சாலைகள், 2023 கிலோ மீட்டருக்கு உட்புறச் சாலைகள்,

* சென்னை முழுவதும் பேருந்து நிறுத்த நிழற்குடைகள்,

* 81 ஓய்வுப்பூங்காக்கள்,

* 18 சாலையோரப் பூங்காக்கள்,

* 47 குடியிருப்புப்பகுதி விளையாட்டுத் திடல்கள்,

* சென்னை மருத்துவமனைகள் மூலம் 83,34,076 புறநோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை

* வருமுன் காப்போம் திட்டம் மூலம் 2,50,000 பேருக்கு நோய்தடுப்பு சிகிச்சை* பிரசவ காலத்தில் குழந்தைகளையும் தாயையும் காக்கும் 93 தாய் சேய் நல மருத்துவக்கூடங்கள்

* கொத்தவால்சாவடியிலிருந்து கோயம்பேட்டிற்கு வணிகச்சந்தை மாற்றம்

* பல கி.மீ சாலைகளுக்கு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள்.

*மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றன.

* இந்தியாவிலேயே முதன்முறையாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதுபோல மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வார்டு வளர்ச்சி நிதி வழங்கினேன்.

* மாநகராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்கும் கனவை நனவாக்கியவன் நான். இதனை நான் சொல்லிக் கொள்வது இல்லை. ஏனென்றால், அது சென்னை மக்களுக்கே தெரியும். பயன்பெற்றவர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எதையுமே செய்ய முடியாத பழனிசாமி போன்றவர்கள் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.2006 முதல் உள்ளாட்சித் துறை அமைச்சர், 2009 முதல் துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த சாதனைகளை இந்த ஒரு கூட்டத்திலேயே மொத்தத்தையும் சொல்லி முடிக்க இயலாது.

* உள்ளாட்சியில் மக்களையும் இணைக்கும் வகையில் உள்ளாட்சி விழாக்கள்!

* சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது!* வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளாட்சித்துறைக்கு மாநில அரசின் நேரடி வருவாயிலிருந்து 31% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

* இந்திய அளவில் 6310 கிராமங்களுக்கு வழங்கப்பட்ட நிர்மல் புராஸ்கர் விருதை தமிழகத்திலிருந்து மட்டும் சுமார் 1474 கிராமங்கள் அள்ளிக்குவித்தன.

* ஊராட்சி தோறும் மின் மயானங்கள்!

* தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்து 104 ஊராட்சிகளில் தனி நூலகங்கள்

* மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தை பின்தங்கிய கிராமங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் முடுக்கிவிட்டதால், இந்தியாவிலேயே மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு தேசிய அளவில் 6 விருதுகளை வாங்கியவன்.

* ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 76% பெண்கள், 56% தாழ்த்தப்பட்டோர் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்திக் காட்டியதால் உச்சநீதிமன்றத்தின் பாராட்டைப் பெற்றேன்.* தமிழக மகளிர் மேம்பாட்டுக் கழகத்தை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைத்தேன்.* தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் புதிய மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கினேன். இதில் 20 லட்சம் பெண்களை இணைத்தேன். இதன் மூலமாக சுமார் 4 ஆயிரம் கோடி சுழல் நிதியை என் கரங்களால் அப்பெண்களுக்கு வழங்கினேன்!* மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 2,568 கோடி வங்கி சேமிப்பு உருவாக வித்திட்டேன். அதன் மூலம் சுமார் 7000 கோடி வரை சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் கிடைக்கக் காரணமாக இருந்தேன்.* முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கனவுத்திட்டமான சமத்துவபுரங்களைக் கட்டி எழுப்பியதும் எனது துறையின் கீழ்தான். 5 ஆண்டுக்குள் 95 சமத்துவபுரங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.* தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்த கான்கிரீட் வீடு கட்டும் திட்டமும் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.* சுமார் 15 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு மறுகட்டுமானம் செய்ய உத்தரவிட்டேன்.* 2,032 கோடியில் சென்னையிலும், 2,497 கோடியில் மதுரையிலும், 3,187 கோடி கோவையிலும் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் அமைத்தவன் நான்!* வேலை நியமனத் தடைச் சட்டத்தை நீக்கி உள்ளாட்சித் துறையில் மட்டும் 25 ஆயிரம் புதிய பணிநியமனங்கள்!* வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலம் 1.22 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு- இவை அனைத்தையும் செய்து கொடுத்தவன் இந்த ஸ்டாலின்!630 கோடியில் இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், 1,400 கோடியில் வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம், 1,928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நெம்மேலியில் 533 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் – இவை அனைத்தும் எனது பெயரைச் சொல்லும்!இந்தத் தருமபுரி மாவட்டத்தில் கேளுங்கள் எனது பெயரை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தோடு சேர்த்துச் சொல்வார்கள். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய குடிதண்ணீரில் ப்ளோரைடு அதிகமாக கலந்து உள்ளதால், குறிப்பாக பென்னாகரம் பாலக்கோடு தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும் பற்களில் காரை படிவதும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதில் இருந்து இந்த இரண்டு மாவட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.முதலமைச்சர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் உதித்த திட்டம் அது. அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து, அந்தத் திட்டத்தை செயல்படுத்த நான் முனைப்பாக இருந்தேன்.முதலமைச்சர் கலைஞர் அவர்கள் என்னை ஜப்பான் நாட்டுக்கு அனுப்பி வைத்து, இதற்கான திட்டமிடுதல்கள், நிதி வசதிகள் ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை முடுக்கி விடச் சொன்னார்கள். நான் ஜப்பான் சென்று இதற்கான பணிகளைச் செய்தேன். அப்படி உருவாக்கப்பட்டது தான், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். அந்தச் சீரிய திட்டத்தை கடந்த 2008ஆம் ஆண்டு தருமபுரியில் முதலமைச்சர் கலைஞர் அவர்களே துவக்கி வைத்தார்.பலமுறை கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரிக்கு நான் நேரில் வந்து பணிகளை முடுக்கி விட்டேன். சுமார் 80 சதவீதப் பணிகள் நிறைவுற்ற நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், மற்றும்18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 ஊரகக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. பின்னர் வந்த அ.தி.மு.க. அரசு அந்தத் திட்டத்தை முடக்கி வைத்தது.தி.மு.க. துவக்கி வைத்தது என்ற ஒரே ஒரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பணிகளை அப்படியே கிடப்பில் போட்டது. பின்னர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வேறுவழியின்றி அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.எந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நான் தொடக்கி வைத்தேனோ, ஜப்பான் சென்று அடிப்படைப்பணிகளைச் செய்து கொடுத்தேனோ, சுமார் 80 சதவிகித பணிகள் முடியக் காரணமாக இருந்தேனோ, அந்த ‘ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துங்கள்’ என்று நானே போராடும் சூழ்நிலையை ஏற்படுத்திய இரக்கமற்ற அரசுதான் இந்த அ.தி.மு.க. அரசு.மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காகக் கொண்டு வந்த திட்டத்தைக் கூட அரசியல் நோக்கத்தோடு முடக்கிய மிக மோசமான அரசு இந்த அரசு. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் இலட்சக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும் என்று கூடப் பார்க்காமல், இதனால் தி.மு.க.வுக்கு அந்தப் பெருமை போய்விடும், கலைஞருக்குப் புகழ் கிடைத்துவிடும், ஸ்டாலினுக்குப் பேர் கிடைத்துவிடும் என்ற குறுகிய நோக்கத்தோடு அரசியல் நடத்தும் சிறுமதியாளர்கள் கையில் கோட்டை போய்விட்டது. அதனால்தான், நாம் ‘தமிழகம் மீட்போம்’ என்று முழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது!* இந்தத் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கியது கழக அரசு!* மகளிர் சுயஉதவிக்குழுக்களை அமைத்தபோது அதனைத் தொடங்கி வைக்கும் விழாவை தருமபுரி மாவட்டம் அதகப்பாடியில்தான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நடத்தினார்கள்! * தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் வழியில் தொப்பூரில் வளைவுகள் காரணமாக அதிகளவில் விபத்துகள் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசு உதவியுடன் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு இருவழிப் பாதையாக மாற்றிச் செயல்படுத்தியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!* தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களை அதிகரித்தவர் முதலமைச்சர் கலைஞர்!* தி.மு.க. ஆட்சியில்தான் 426 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டன!* பஞ்சப்பள்ளி அணையிலிருந்து பாலக்கோடு மாரண்டஅள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெறும் வகையில் திட்டம் தீட்டி குடிநீர்த் தேவையை வழங்கியது தி.மு.க. அரசு! ஆனால், உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகன், பஞ்சப்பள்ளி குடிநீர்த் திட்டம் தருமபுரிக்கு வருவதை நிறுத்தி விட்டதாக மக்கள் புகார் தருகிறார்கள்.* அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமதுரை அணைக்கட்டை உருவாக்கி விவசாயிகள் பயன்பெறக் காரணமானது தி.மு.க. அரசு!* அனுமந்த தீர்த்தம் தரைப்பாலத்தை மேம்பாலம் ஆக்கியது தி.மு.க. அரசு!* மொரப்பூர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமையக் காரணமானது தி.மு.க. அரசு!* மொரப்பூரில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார்.* அரூரில் ஒரு புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.* அரூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் புதியதாகக் கட்டப்பட்டது.இப்படி கழக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் புதிய திட்டமும் இல்லை, கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை!* தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை வைத்து தருமபுரி மாவட்டத்தில் 15 ஊராட்சிகள் பயனடையும் திட்டம் கொண்டுவரப்படும் என்று சொன்னார் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன். செய்தாரா? இல்லை! ஐந்து ஆண்டுகள் ஆகியும் எதுவும் செய்யவில்லை!* அலையாளம் அணைக்கட்டிலிருந்து தூள் செட்டி ஏரி வரை வாய்க்கால் அமைத்து நீர் கொண்டுவரும் திட்டத்தை நான் வெற்றி பெற்றவுடன் கொண்டுவருவேன் என கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்ட கே.பி. அன்பழகன் சொன்னார். பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. செய்தாரா? இல்லை! எதுவும் செய்யவில்லை!* வத்தல்மலையை சுற்றுலாத் தலம் ஆக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஆணை பிறப்பித்தார்கள். ஏதாவது நடந்துள்ளதா? இல்லை! அப்படியே கிடக்கிறது அந்தத் திட்டம்!* தருமபுரி மாவட்டத்தில் தொழில்பேட்டை அமைக்கப்படும் என்று அறிவித்தார்களே தவிர, இதுவரை அமைக்கப்படவில்லை!- இதுதான் அ.தி.மு.க. அரசு.இந்த தருமபுரி மாவட்டத்துக்கு கழக ஆட்சியில் என்ன செய்து தந்தோம் என்பதை நான் சொன்னேன். அ.தி.மு.க. அரசு எதைச் செய்யத் தவறியது என்பதையும் சொன்னேன்.இதுதான் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாடு. தி.மு.க.வின் சாதனைகளை என்னால் அடுக்க முடியும். ஆனால் தன்னுடைய சாதனைகளைச் சொல்லாமல் வெறும் வாய்வீரம் மட்டும்தான் அ.தி.மு.க.வால் காட்ட முடியும்.அ.தி.மு.க. மீதான ஊழல் பட்டியலை நாங்கள் கூட கவர்னருக்குக் கொடுக்கவில்லை, சின்னய்யா அன்புமணி அவர்கள்தான் கொடுத்தார்.1. கிரானைட் ஊழல்2. சட்டவிரோதமான தாது மணல் கொள்ளை3. ஆற்றுமணல் ஊழல்4. மின் துறை ஊழல்5. மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேவையில்லாத தாமதம்.6. 3,600 மெகாவாட் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம்7. மின்சாரக் கொள்முதலில் ஊழல்8. கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் ஊழல்9. பொது விநியோகத்துக்கான பருப்பு கொள்முதல் செய்வதில் ஊழல்10. முட்டை ஊழல்11. ஆவின் பால் ஊழல்12. ஒப்பந்தங்கள் ஊழல்13. போக்குவரத்துத்துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல்14. கோக் ஆலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழல்15. கல்வித்துறை நியமனத்தில் ஊழல்16. பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்17. மது விற்பனையில் ஊழல்18. ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டை ஊக்குவிக்கும் நிழல் அரசாங்கம்- என்று. இந்தப் பட்டியலைக் கொடுத்து அ.தி.மு.க. அரசு மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது பா.ம.க.“இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக உள்ளது. 2011-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் அனைத்துத் துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்தது. ஜெயலலிதாவைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆட்சியிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆட்சியில் முன்பை விட ஊழல்கள் அதிகரித்துள்ளன” என்று அன்புமணி அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.இந்தப் பட்டியல் பழைய பட்டியல். இப்போது பட்டியல் போடுவதாக இருந்தால் 100 வரைக்கும் போடலாம். அந்த அளவுக்கு ஊழல் நாற்றமெடுக்கும் அரசுதான் இந்த எடப்பாடி பழனிசாமி அரசு! தனது ஊழல் நாற்றத்தை மறைக்க பல்வேறு நாடகங்களை ஆடி வருகிறார் பழனிசாமி! இதை மறைக்கத்தான் நானும் விவசாயி என்று நடித்துக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.அவர் பச்சைத்துண்டு பழனிசாமி அல்ல, பச்சைத் துரோகப் பழனிசாமி என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். விவசாயிகளின் கனவுகளைச் சிதைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததை விட பழனிசாமியின் துரோகத்துக்கு வேறு ஏதாவது சான்று வேண்டுமா?இதைக் கேட்டால், ஸ்டாலின் என்ன விவசாயியா, அவருக்கு விவசாயம் தெரியுமா? என்று கேட்கிறார் பழனிசாமி. ஏதோ புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுவிட்டதைப் போல சிரித்துக் கொள்கிறார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுங்கள், அனைவரது ஆலோசனையையும் கேளுங்கள் என்று சொன்னேன். உடனே, ஸ்டாலின் என்ன டாக்டரா என்று கேட்கிறார் பழனிசாமி.நீதிமன்றத்தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் நீதிபதியாக இருக்க வேண்டுமா? நீட் தேர்வைப் பற்றிப் பேசுபவர் மருத்துவராகத்தான் இருக்க வேண்டுமா? ராக்கெட் பற்றி பேசுபவர் விஞ்ஞானியாகத்தான் இருக்க வேண்டுமா? தேவையல்ல. மக்களைப் பற்றிய உண்மையான அக்கறை இருந்தால், யாரும் எதைப் பற்றியும் பேசலாம்.அப்படித்தான் விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருப்பதால் விவசாயிகள் நலன் காக்க நான் பேசுகிறேன்.தமிழக மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு சிறு சேதாரம் ஏற்பட்டாலும் அதனை இந்த ஸ்டாலின் தட்டிக் கேட்பான்.எனவே, விவசாயம் பற்றி, வேளாண்மை பற்றி நான் பேசக் கூடாது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி யார்? அவர் என்ன சர்வாதிகாரியா? இந்த நாட்டில் வாய்ப்பூட்டுச் சட்டம் அமலில் இருக்கிறதா?கோடிக்கணக்கில் அரசாங்க கஜானாவைக் கொள்ளை அடித்துக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசின் அனைத்து உத்தரவுக்கும் அடிபணிந்து எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றால், அதைக் கைகட்டி, வாய்பொத்தி திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்காது.தந்தை பெரியாரோ, பேரறிஞர் அண்ணாவோ, முத்தமிழறிஞர் கலைஞரோ எங்களை அப்படி வளர்க்கவில்லை.’கிளம்பிற்றுக் காண் தமிழச்சிங்கக் கூட்டம், கிழித்தெறியத் தேடுது காண் பகைக்கூட்டத்தை’ என்று புரட்சிக்கவிஞர் பாடிய தமிழ்ப் பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.விவசாயிகளை அடமானம் வைப்பாய். ஒடுக்கப்பட்ட மக்களை அடமானம் வைப்பாய். சிறுபான்மையினரை அடமானம் வைப்பாய். தமிழை அடமானம் வைப்பாய். தமிழ்நாட்டை அடமானம் வைப்பாய்.தன்மானமும் இனமானமும் இழந்து இந்த அடமானக் காட்சிகளை வேடிக்கை பார்க்க நாங்கள் ஏமாந்த சோனகிரிகள் அல்ல.எந்த அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு இனத்தைக் காக்கும் எஃகு மனிதர்களைக் கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.ஒரு கையால் எதிரிகளின் பகை முடிப்போம். மறுகையால் தமிழினத்துக்கு வாழ்வளிப்போம். வெற்றிபெறுவோம்.அதியமான் கோட்டையில் நீங்கள் எடுக்கும் சூளுரை, சென்னைக் கோட்டையில் எதிரொலிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!நன்றி. வணக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *