வேலூர் மாவட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக் கேட்பு
வேலூர், நவ-19

திமுக சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தமிழகம் முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்துக் கேட்பு கூட்டமானது நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற குழுத்தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, மாவட்ட செயலாளர்கள் ஆர்.காந்தி, நந்தகுமார், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.