மெரினா கடற்கரையை திறக்க அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றமே முடிவெடுக்கும்..!

மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, நவ-18

சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, மெரினா கடற்கரையை திறப்பது குறித்து சென்னை மாநகராட்சி அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. மெரினா கடற்கரையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் அரசு முடிவெடுக்கவுள்ளது என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை திறப்பது குறித்து அரசு வரும் 30ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும் என்று ஆணையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *