தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது..!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கி உள்ளது.

சென்னை, நவ-18

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின.

இந்நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சலிங் இன்று தொடங்கி 20ம் தேதிவரை நடக்கிறது. மருத்துவப் படிபில் இந்த ஆண்டு சேர்க்கை பெற மொத்தம் 972 அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,எம்பிபிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் தரவரிசைப் பட்டியலின்படி, காலை 9 மணி முதல் 11 மணி வரை, 1 முதல் 151 தரவரிசையில் (நீட் தேர்வில் 664 மதிப்பெண் முதல் 249 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து, 152 முதல் 267 தரவரிசையில் (நீட் தேர்வில் 248 முதல் 190 மதிப்பெண் வரை) உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் மருத்துவ கலந்தாய்வில், அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித் குமாருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை பிற்பகலில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.

கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக் கவசம், தனி நபா் இடைவெளி, நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றுபவா்கள் மட்டுமே கலந்தாய்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவா்களும், அவா்களுடன் வருவோரும் அமருவதற்கான இருக்கைகள் போதிய இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, அவ்வப்போது அதனை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த பணியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். கலந்தாய்வுக்கு வருவோா் தனி நபா் சுகாதாரத்தைப் பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *