நடிகை குஷ்புவின் கார் விபத்து.. முருகப்பெருமான் காப்பாத்திட்டார் என சிலாகித்த குஷ்பு..!!
சென்னை, நவ-18

பாஜகவில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்பு வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி காரில் மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அதாவது மதுராந்தகம் அருகே கார் சென்றபோது பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி நடிகை குஷ்புவின் காரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லேசாக உரசியது. இந்த விபத்தில் காரின் பின்புற கதவு (பக்கவாட்டில்) பலத்த சேதம் அடைந்தது. காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதில் குஷ்புக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து ட்விட் செய்துள்ள நடிகை குஷ்பு, தனது கணவர் வணங்கும் கடவுள் முருகன் அருளினால் விபத்தில் இருந்து தப்பியதாக கூறியுள்ளார். முருகனின் அருளால் விபத்தில் இருந்து தப்பியதாகவும் கூறி அவர், விபத்தில் கார் சேதமடைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் எந்தத் தடையுமின்றி தனது பயணத்தை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார். தனது பயணத்தை எதுவும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்து தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.