மோடிக்கு மிரட்டல் விடுத்த பாக். பாடகி…வச்சு செய்யும் நெட்டிசன்கள்…

அக்டோபர்-23

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் புகைப்படங்களை பதிவிட்ட பாகிஸ்தான் பாடகியை டுவிட்டரில், இந்திய நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் பாடகியான ரபி பிர்சதா என்பவர் தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்ட போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மோடியை ஹிட்லர் என விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார். இவர் இதனை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் அவரை கிண்டல் செய்து சரமாரியாக கருத்து பதிவிட துவங்கினர்.

இதில் ஒருவர், இது பாகிஸ்தானின் தேசிய உடை என்றும், மற்றொருவர் பயங்கரவாதத்திற்கு பாக்., முழு ஆதரவு அளிப்பது இதில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது எனவும் பதிவிட்டுள்ளனர். மேலும் ஒருவர், பாகிஸ்தான் பாரம்பரிய உடையில் நீங்கள் அற்புதமாக உள்ளீர்கள் எனவும், பாக்., பிரதமர் இம்ரான்கான் இதனை தேசிய உடையாக அறிவிக்கலாம் என கேட்டுள்ளார்.

இதே போன்று கடந்த மாதம் காஷ்மீர் விவகாரத்தில் முடிவு எடுத்த மோடியை தாக்க தங்கள் மண்ணில் பலர் தயாராக உள்ளதாகவும் மிரட்டி இருந்தார். இதைக் கண்டித்தும் பலர் கருத்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *