உலகில் தற்போதைய மிகப்பெரிய பிரச்சினை பயங்கரவாதம்தான்.. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தற்போது பயங்கரவாதம் என்ற மிகப்பெரிய பிரச்சனையை உலகம் சந்தித்து வருகிறது என 12-வது பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார்.

டெல்லி, நவ-17

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 2019-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 11-வது மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்றது.

பிரிக்ஸ் அமைப்பின் 12-வது மாநாடு இந்த ஆண்டு ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான மாநாடு காணொலி காட்சி மூலம் நவம்பர் 17 (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாநாடு இன்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது ‘‘பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை பொறுப்பாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினையை முறையான வழியில் சீர் செய்ய வேண்டும். உலகில் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை பயங்கரவாதம்தான். சர்வதேச அமைப்புகளின் திறன்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றன.

இதற்கு முக்க்கிய காரணம் என்னவெனில், நடப்பு சூழலுக்கு ஏற்ப மாற்றம் கொண்டு வரப்படாததே ஆகும். இந்தியா பன்முகத்தன்மைக்கு உறுதியான ஆதரவளிக்கும் நாடாகும். ஐக்கிய நாடுகள் அவையின் 75-வது ஆண்டு தினம் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. பன்முகத்தன்மைக்கு ஆதரவளிக்கும் முதன்மையான நாடு இந்தியா ஆகும். இந்திய பாரம்பரியப் படி ஒட்டு மொத்த உலகமும் ஒரு குடும்பமாக கருதப்படுகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *