பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

அக்டோபர்-23

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை இரண்டு மணிநேரம் என நிர்ணயித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. எந்த இரண்டு மணிநேரம் என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையன்று, காலை 6 மணி முதல் ஏழு மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், நீதிமன்றம் உள்ளிட்ட அமைதி காக்க கூடிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. இதேபோன்று, குடிசைகள் இருக்கும் பகுதி, எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் பட்டாசு வெடிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *