பாஜகவில் இணைகிறேனா? காமெடி பண்றாங்க.. மு.க.அழகிரி அதிரடி பேட்டி
சென்னை, நவ-17

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.கவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, அக்கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் இருந்துவந்தார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். இதற்கிடையில், கட்சி கட்டுப்பாட்டை மீறினார் தி.மு.கவிலிருந்து அழகிரியை கருணாநிதி நீக்கினார். அதனையடுத்து, கருணாநிதி மறைந்த பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் கீழ் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், அவரை தி.மு.கவில் மு.க.ஸ்டாலின் சேர்க்கவில்லை. அதனையடுத்து, அவர் அரசியிலிருந்து விலகி உள்ளார்.
இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்க உள்ளதாகாவும்,
அது தொடர்பாக வரும் 20-ம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அவரது தந்தை கருணாநிதி பெயரில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.
இதனிடையே வரும் 21-ம் தேதி தமிழகம் வரஉள்ள அமித்ஷாவை அழகிரி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில், பாஜகவில் இணைவது குறித்தோ, புதிய கட்சி தொடங்குவது பற்றியோ இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. நான் பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என எல்.முருகன் கூறுவது அவரது கருத்து. ஆதரவாளர்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவு எடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் பாஜகவில் சேரவுள்ளதாக சிலர் காமெடி செய்துக்கொண்டு இருப்பதாகவும் மு.க. அழகிரி தெரிவித்தார்.