அரசு விட்ட புதிய பேருந்துக்கு உள்ளே ஒழுகியது மழை நீரா, ஊழலா? – கமல் ட்வீட்
சென்னை, நவ-17

திண்டுக்கல்லில் அரசு புதிதாக விட்ட பேருந்தில் மழை நீர் ஒழுகியது. பயணிகள் குடை பிடித்தபடி அமர்ந்து சென்றனர். ஓட்டுநர் நனைந்தபடி ஓட்டிச் சென்றார். இதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“புத்தம் புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடை பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழை நீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?”
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.