மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம்.. வலை வீசும் எல்.முருகன்

மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறி உள்ளார்.

திருவண்ணாமலை, நவ-17

மு.க.அழகிரி 2014ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அக்கட்சியில் இருந்து நீக்கப்ட்டார். அதன்பிறகு நேரடி அரசியலில் பங்கேற்காமல் இருந்து வந்தார். ஆனால், அவ்வப்போது அரசியல் பிரவேசம் குறித்து பேசி வருகிறார். இதனிடையே, தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக வரும் 20ம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், தமிழகம் வர உள்துறை அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில், திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம். மு.க .அழகிரி உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *