புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை மையம்

கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, நவ-17

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும். சென்னை நகர், புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு லேசான மழையே பெய்யும். குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *